மல்ஹமா என்பது சண்டை, போர் ஆகும். ஆனால் நாம் நினைப்பது போல் அது ஓர் சிறிய சண்டை அல்ல, தொடர்ச்சியாக நடக்க கூடிய போர். ஒன்றுக்கொன்று தொடர்புடைய சண்டை. நீண்ட கால மோதல். சிறிய போரிலிருந்து தொடரக்கூடிய பெரிய போர். மூன்றாம் உலக போர் என்றே சொல்லலாம்.
சமகால முஸ்லீம்களை பொறுத்த வரை மிக முக்கிய நிகழ்வான மல்ஹமா கடுமையான குழப்பம் நிறைந்த காலகட்டத்தில் நடைபெறும். இமாம் மஹதி (அலை), ஈஸா (அலை), கிலாஃபா எழுச்சி மற்றும் தஜ்ஜால் வருகை சம்பந்தப்பட்டது. பத்ர் போரை போல் திருப்புமுனையை உண்டாக்கும் போர் என்று சொன்னாலும் மிகையாகாது.
முஸ்லீம்களுக்கும் ரோமர்களுக்கும் மத்தியில் மல்ஹமா நடைபெறும்
ரோம் என்பது அரசியல் ரீதியான அடையாளம் அல்ல. இனம் அல்லது கலாச்சாரம் ரீதியான அடையாளம். ஒரு நேரத்தில் ரோமர்கள் ஐரோப்பாவில் இருந்தார்கள். ஆனால் தற்போது வட, தென் அமேரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இன்னும் எங்கெல்லாம் இருக்கின்றார்களோ அதனையும் உள்ளடக்கும்.
பெருமானார் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புக்கு தகுந்ததுபோல், மேற்குலகம் தன்னை இஸ்லாத்திற்கு எதிராக, சத்தியத்திற்கு எதிராக கட்டமைத்து வருகின்றது. இது இன்றோ நேற்றோ இருக்ககூடிய உருவாக்கம் அல்ல. பல நூற்றாண்டுகளாக அவர்கள் தங்களை கட்டமைத்து வந்திருக்கின்றார்கள். இன்னொரு பக்கம் முஸ்லிம் உலகத்தை பார்ப்போம் என்றால், முஸ்லிம் தலைமைகள் ஏமாளிகளாகவும், பெரும் உறக்கத்திலும், ஏமாற்று பேச்சுவார்த்தை / அமைதி ஒப்பந்தம் என்ற பெயரிலும், மேற்கத்தியர்களின் அடிமைகளாகவும் உள்ளனர். புனித தலங்களின் காப்பாளர்களே அமெரிக்காவின் கம்யூனிஸத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவை விட அதிகம் முஸ்லீம் உம்மத்தின் பொருளாதரத்தை செலவழித்திருக்கிறார்கள் என்றால் பிற நாடுகள் குறித்து கேட்கவே வேண்டாம்.
ஓர் கட்டத்தில் ரோம் கிறித்தவத்தை தழுவுகின்றது. கிறித்துவத்தின் பெயரால் பல்வேறு அழிவுகளை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். கிறித்துவ மதத்தையே மாற்றிவிட்டார்கள். கிழக்கில் இருந்த கிறித்துவர்களும் அரபு கிறித்தவர்களும் உண்மையில் சாந்தமான மார்க்கத்தை தான் பின்பற்றினார்கள். திரித்துவ கொள்கை உள்ளிட்ட ஷிர்க்கான விஷயங்களை பின்பற்றினாலும் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்ற அடிப்படையே அவர்களின் இயல்பாக இருந்தது. சாந்தமான மதம் என்று பெயர் எடுத்த கிறித்தவத்தை, மனித வரலாற்றில் கிறித்தவத்தை விட மனித இரத்தத்தை ஓட்டாத மதம் இல்லை என்ற நிலைக்கு ரோமர்கள் ஆக்கிவிட்டார்கள். சிலுவை போரில் கொல்லப்பட்ட முஸ்லீம்கள் / நிலத்துவ பிரபுக்களுக்கு மத்தியில் நடைபெற்ற போரில் கொல்லப்பட்டவர்கள் / ஐரோப்பாவில் கிறித்துவ பிரிவுகளுக்கு மத்தியில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டவர்கள் / வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்க கண்டத்தில் பூர்வகுடிகளை ஒட்டுமொத்த இனபடுகொலை செய்தவர்கள் (ஆராய்ச்சிக்காக விட்டுவைத்த ஒரு சிலரை தவிர) என ஆரம்பித்து பொருளாதர தடையின் மூலம் இலட்சக்கணக்கான ஈராக்கிய குழந்தைகளை கொன்றது,இஸ்ரேலின் மூலம் பலஸ்தீன் இளங்குருத்துக்களையும் அகதிகளையும் கொன்றது, ஆப்கான், சோமாலியா, ஷாம் வரைக்கும் அவர்களின் கொலைப்பட்டியல் நீண்டது. நீண்ட காலமாக சத்தியத்தின் வாடையே இல்லாமல், சத்தியத்திலிருந்து தொலைதூரம் வாழக்கூடிய ஓர் சமூகமாக ரோமர்கள் இருந்த காரணத்தால் ஷைத்தான் அவர்களை தேர்ந்தெடுத்து கொண்டான் தன்னுடைய நாச வேலையை அரங்கேற்றுவதற்கு. இஸ்லாத்துக்கு எதிரான தன்னுடைய போரில் போரிட ஷைத்தானுக்கு சிறந்த நபர்கள் தேவைப்படுகிறார்கள்.
ஷாமில் உள்ள அல் அமக் / தாபிக்கில் ரோமர்கள் முஸ்லீம்களை தாக்குவார்கள்
போரின் தொடக்கத்தில் முஸ்லீம்களின் நிலை பலவீனமானதாகவும் இறுதியில் வெற்றியானதாகவும் மாறும். பித்னா உச்சத்தில் இருப்பது போல் நன்மையும் அதிகமாக இருக்கும். தஜ்ஜால் வருவதை போல் ஈஸாவும் மஹ்தி (அலை) வருவார்கள்.மதீனாவிலிருந்து முஸ்லீம்களின் ராணுவம் ரோமர்களை எதிர்கொள்ள செல்லும். அன்றைய காலகட்டத்தின் உலகின் மிகச் சிறந்த நம்பிக்கையாளர்களாக அவர்கள் இருப்பார்கள் என்பது அவர்களின் சமூகத்தில் நாம் இருக்க மாட்டோமா என்று நம்மை ஏங்க வைக்கும். அதே சமயம் ஒட்டு மொத்த ரோமர்களும் இஸ்லாத்துக்கு எதிராக இல்லை. அவர்களிலும் சத்தியத்தை தேடுபவர்களின் உள்ளங்களை இஸ்லாம் வெல்லும். இறைவனால் சபிக்கப்பட்ட சமூகமான யூத சமூகத்திலேயே அப்துல்லா பின் ஸலாம் (ரலி) முதல் லியோபால்டு முஹம்மது அஸத் வரை இஸ்லாத்தை ஏற்று கொண்டது இதற்கான தெளிவான உதாரணம். இஸ்லாத்தை ஏற்று கொண்ட ரோமர்களான தங்களது சகோதரர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு முஸ்லீம்களிடம் கோரிக்கை விடுப்பார்கள்.
ஆனால் அவர்களுக்கு தெரியாது போலும் இஸ்லாம் எத்தகைய நிலப்பரப்புக்கும் கட்டுப்படாது, அல்லாஹ்வின் பெயர் உயர்த்தப்படும் இடமெல்லாம் முஸ்லீமின் தேசம் என்பதும் இறைவனின் வாக்கு நிலைநாட்டப்படும் இடமெல்லாம் நம் நாடே எனும் உண்மையும்.எத்தகைய உறவை விடவும் ஈமானிய உறவு பலம் வாய்ந்தது என்பதற்கு அபுபக்கர் ரலி மகனை நோக்கி சொன்ன சொல்லாடலிருந்து அரபுலகில் பிறந்த அப்துல்லாஹ் அஸ்ஸாமிலிருந்து உசாமா வரை ஆப்கன் மண்ணில் இரத்தம் சிந்தியது வரை தெளிவான வாழும் சாட்சிகள். எங்களது சகோதரர்களை நாங்கள் ஒப்படைக்க மாட்டோம் என்று முஸ்லீம்கள் கூறியவுடன் போர் தொடங்கும். முஸ்லீம்களில் மூன்றில் ஒரு பங்கினர் புறமுதுகிட்டு ஓடுவர். அவர்கள் அது வரை செய்த நல்லமல்கள் அழிக்கப்படுவதோடு அவர்களின் தவ்பாவும் அல்லாஹ்விடத்தில் ஏற்று கொள்ளப்படாது. இவர்களுக்கும் கிலாபாவை மீள் கட்டமைக்க போகிறோம், புதிய விடியலை காண்பிக்க போகிறோம், ஏகத்துவத்தின் அடிப்படையிலான சமூகத்தை சமைக்க போகிறோம் என்று கூறிக் கொண்டுஅல்லாஹ்வுக்கு இணையான தாகூத்களை உருவாக்கும் இஸங்களுக்கு சாமரம் வீசி கொண்டு அதிகாரம் மக்களுக்கே என்று கீழிறிங்கியவர்களுக்கும் என்ன வித்தியாசம். அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக. (“எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள். (3:8)).
மூன்றில் இன்னொரு பங்கினர் கொல்லப்படுவார்கள். அவர்கள் அல்லாஹ்விடத்தில் மிகச் சிறந்த ஷஹீதுகளாக கணிக்கப்படுவர். மீதமுள்ள மூன்றில் ஒரு பங்கினருக்கு அல்லாஹ் வெற்றியை கொடுப்பான். கான்ஸ்டன்டிநோபிலை (துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்) வெற்றி கொள்ளும் வரை அவர்களை எதுவும் ஒன்றும் செய்ய இயலாது. கனீமத் பொருட்களை பங்கிடும் போது தஜ்ஜால் வந்து விட்டான் என்று செய்தி கேட்டு ஷாமுக்கு செல்வர். பின்பு அது வதந்தி என்பது புலனாகும். சில காலம் கழித்து தஜ்ஜால் ஈஸா (அலை) அவர்களால் கொல்லப்படுவான் என்பது தனி விடயம்.
ஈராக், ஷாமின் மீது பொருளாதார தடை
"ஒரு காலம் வரும். அச்சமயம் ஈராக் மீது தடை விதிக்கப்படும். எவ்வித உணவு பொருளோ அல்லது பொருளாதார உதவியோ உள்ளே நுழையாது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறிய போது யார் அத்தடையை ஏற்படுத்துவார்கள் என கேட்கப்பட்ட போதுஅல் அஜம் (முஸ்லீமல்லாத அரபி அல்லாதவர்கள்) என்று கூறினார்கள். ஷாமின் (பாலஸ்தீன், சிரியா, ஜோர்டான், ஈராக்) மீதும் அவ்வாறே தடை ஏற்படுத்தப்படும் என்றும் கூறிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அர்ரூம் அத்தடையை ஏற்படுத்துவார்கள் என பதிலளித்தார்கள். ஈராக்கின் மீது ஏற்படுத்தப்பட்ட பொருளாதார தடையும் ஈராக்கில் கிளம்பிய தீ இன்று ஷாம், ஏமன் என விரிவடைவதும் இந்நபிமொழி உயிர்ப்பிக்கப்படும் காலத்தில் நாம் வாழ்வதை உறுதிப்படுத்துகிறது. அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ஏமனை பற்றி குறிப்பிடும் போது ஏமனின் இருந்து கிளம்பும் 12,000 நபர்கள் கொண்ட படை தனக்கு பிறகு சிறந்த படை என்றும் ஈமான் ஏமனில் இருக்கிறது என்று சிலாகித்து கூறியுள்ளார்கள். மேலும் எப்படையை கைக்கொள்வது என்பது பற்றிய கேள்விக்கு ஷாமில் உள்ள படையை கைக்கொள்ளுங்கள் என்றும் பதிலளித்துள்ளார்கள்.
30 வருடங்களுக்கு முன் எவ்வித ஊடகத்திலும் முஸ்லீம் உம்மத் குறித்து விவாதிக்கப்பட்டதில்லை. ஆனால் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சரியாகவோ தவறாகவோ இஸ்லாம் விவாதப்பொருளாகி உள்ளதை தெளிவாக உணரலாம். அதனால் தான் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது பார்வையாளர்களாக இருந்த முஸ்லீம்கள் நிச்சயம் இறைவன் நாடினால் மூன்றாம் உலக போரில் கதாநாயகர்களாக விளங்க போகின்றனர் என்பதை நாம் தெளிவாக உணரலாம். ஆனால் அதற்கு நாம் சில விலைகளை கொடுத்தாக வேண்டும். ஒவ்வொரு பிரசவத்துக்கும் வலி இருப்பதை போல் மீண்டும் அந்நிலையை அடையை இச்சமூகத்துக்கு ஒரு மீள் பிரசவம் தேவைப்படுகிறது என்ற ஷஹீத் சையது குதுப் (ரஹ்) அவர்களின் வார்த்தையை நம்மால் புறந் தள்ள இயலாது.
தனித்துவமானவர்கள் ஸஹாபாக்கள்
ஸஹாபாக்களை நாம் எத்தலைமுறையோடும் ஒப்பீடு செய்ய முடியாது. அவர்கள் இஸ்லாத்தை நிலைநிறுத்த தங்கள் வாழ்வையே அர்ப்பணித்த காரணத்தால் தான் அவர்களுக்கு பின்னால் வந்த தாபியீன்கள், தபோ தாபியீன்களால் குரானுக்கு விளக்கவுரைகளும் ஹதீதுகளுக்கு தெளிவுரைகளும் எழுத முடிந்தது. ஏனென்றால் சமூகத்தின் ஓட்டத்தோடு அல்ல, சமூகத்தின் ஓட்டத்துக்கு எதிராக இயங்கியவர்கள் ஸஹாபாக்கள். அதனால் தான் அவர்கள் ரலியல்லாஹு அன்ஹு. குளிரூட்டப்பட்ட அறையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு பாடம் பயிலவில்லை. இளைப்பாறலே வாளின் கீழ் தான் இருந்தது. அதனால் தான் கனீமத்தாக 40,000 திர்ஹம்கள் கிடைத்த போது குப்பார்களின் சித்ரவதையால் சதை கிழிந்த கப்பாபால் மனமாற ஏற்று கொள்ள முடியாமல் தலையை மறைக்க துணி இல்லாமல் மரணித்த முஸ் அப்பை நினைத்து கவலைப்பட்டார்கள். தன் உயிர் நபியுடன் வாழ வேண்டும் என்பதற்காக ஒட்டு மொத்த செல்வத்தையும் ஜகாத்தாக கேட்ட போது தர்க்கிக்காமல் சுஹைப்பால் கொடுக்க முடிந்தது. தன் தலைவரின் பாதத்தில் முள் தைப்பதை விட தான் கழுவில் ஏற்றப்படுவது குபைப் ரலிக்கு சுகமாக இருந்தது. அதனால் தான் அண்ணலாரால் அம்மாரின் எலும்புக்குள்ளும் ஈமான் ஊடுறுவி இருக்கிறது என்றும் அவர் படும் துன்பம் சகிக்க முடியாமல் அம்மாரை சுவனம் பார்க்க ஆசைப்படுகிறது என்று சொல்ல முடிந்தது.
நம்முடைய உம்மத் உண்மையில் மிகச் சிறந்த உம்மத்தாகும். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல் அவர்கள் கூறினார்கள் " என்னுடைய உம்மத் மழைக்கு ஒப்பானது. அது எப்போது வெடிக்கும் என சொல்ல இயலாது, ஆரம்பத்திலோ அல்லது மத்தியிலோ அல்லது இறுதியிலோ இருக்கலாம்" (திர்மிதி, முஸ்னத் அஹ்மத்). முஹம்மது (ஸல்) அவர்களிலிருந்து ஆரம்பித்த உம்மத் ஈஸா (அலை) அவர்களோடு முடிவுறும் பாக்கியம் நிறைந்தது.
ஸஹாபாக்களால் நிர்மாணிக்கப்பட்ட இஸ்லாம் இன்று இடிந்து கிடக்கும் சூழலில் அதை மீண்டும் புனர்நிர்மாணம் செய்ய வேண்டிய மகத்தான பொறுப்பு நமக்கு உள்ளது என்பதை மறந்து விடக் கூடாது. அதற்காக நாம் தயாராவதோடு நம் பிள்ளைகளையும் தயார்படுத்த வேண்டும். இறைவன் நாடினால் ஸஹாபாக்கள் சமூகம் போல் நம்மாலும் கிலாபா மீள் கட்டமைக்கப்படுவதில் பங்கு செலுத்தும் பாக்கியம் கிடைக்கும் என்பதை மறந்து விட கூடாது.மதீனத்து சமூகம் என்பது புத்தகத்தில் மட்டுமல்ல நாம் நிஜமாகவே பார்க்க இயலும். கஃபதுல்லாஹ்வில் தொழும் பாக்கியம் மக்காவில் வசிப்பவனுக்கு. அவன் தொழாதவனாக இருந்தால் அதை விட பெரும் நஷ்டம் இருக்க முடியாது. முடியாதோ அது போல் அப்பொற்காலத்தில் வாழ்ந்து அதன் பலன்களை அறுவடை செய்ய முடியா விட்டால் நம்மை விட துரதிருஷ்டசாலி யாரும் இருக்க முடியாது.
உமர் என்று நம் குழந்தைகளுக்கு பெயர் வைத்தால் போதாது. அப்பெயருக்கு உரித்தானவனாக நாம் அவனை வளர்த்தோமா என்று அல்லாஹ்விடத்தில் எப்படி பதில் சொல்ல போகிறோம் என்று நினைத்து பார்த்திருக்கிறோமா. நாம் உமராக, அபூபக்கராக, உஸாமா பின் ஜைதாக, காலித் பின் வலீதாக ஆக வேண்டும் அல்லது அவர்களின் தந்தை என்றாவது அல்லாஹ்விடத்தில் அழுது சொல்ல வேண்டும். நாம் அத்தகைய வாய்ப்பை நழுவ விட்டோமெனில் நம்மை விட கைசேதத்துக்குரியவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. ஸஹாபாக்கள் இஸ்லாத்துக்கு ஒரு நாள் முன்னமேயே வந்திருக்க கூடாதா என்று ஏங்குவார்கள். அதை ஈடுகட்ட வியாபாரத்தையே துறந்து திண்ணை தோழர்களாக மாறி போனார்கள்.
இரண்டு விஷயங்களுக்கு தயாராக வேண்டும்
1. தாபாத் - மலை போன்ற உறுதி. பூமிக்கு கீழேயும் வேர்களை கிளப்பி உறுதியாய் நிற்கும் மலைகளை போல் எல்லா சூழலிலும் உறுதியாய் இருக்க வேண்டும். குழப்பம் அதிகரிக்க அதிகரிக்க உறுதியாய் இருப்பவர்களுக்கு பரக்கத்தும் அதிகம் என்ற உணர்வு இருக்க வேண்டும்.
2. தத்கியா - தியாகம் செய்வதற்கான ஆவல்.குழப்பம் நிறைந்த காலகட்டத்தில் நமக்கு மிக முக்கிய தேவை அனைத்தையும் தியாகம் செய்யும் பக்குவம். தூங்கும் போது முஸ்லீமாக தூங்குபவன் விழித்திருக்கும் போது முஷ்ரிக்காக எழும் குழப்ப காலத்தில் நமது உடைமை, பொருளாதாரம், நேரம், உயிர், நமக்கு பிடித்த தலைவர்கள், நாம் சரந்த இயக்கம் அனைத்தையும் அவை பாதகமாக இருப்பின் தூக்கி எறிய தயாராக இருக்க வேண்டும். நல்லவர்களாக இருப்பது மாத்திரம் போதாது, மாறாக இஸ்லாத்தை நபிகளார் காட்டிய அடிப்படையில் நிலை நாட்டுபவர்களாக இருப்பதை கொண்டே ஒரு அமைப்பில் நீடிக்க வேண்டுமே தவிர வெறுமனே அதன் வரலாற்றை கொண்டோ அதை தோற்றுவித்தவர்களை கொண்டோ அல்ல.
குழப்பத்தின் தன்மை
கரிய இரவின் நடுவே ஒரு பொருளை பார்ப்பது எவ்வளவு கடினமோ அது போல் இக்குழப்பம் பனிக்காலத்து பனியை போல் தெளிவின்றி இருக்கும். இவ்விருளுக்கு உள்ளே பயணிக்க ஈமானிய ஒளி இருக்க வேண்டும். குழப்பம் முடிந்து தெளிவான பிறகு ஈமான் கொள்வதில் எவ்வித பயனுமில்லை. சில போது உங்கள் பாதையில் யாருமே துணைக்கு இல்லாமல் தனியாக செல்ல நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மலக்குகள் அவர்களிடம் (நேரில்) வருவதையோ அல்லது உம் இறைவனே (அவர்களிடம்) வருவதையோ அல்லது உம் இறைவனின் அத்தாட்சிகளில் சில வருவதையோ அன்றி (வேறெதனையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? உம்முடைய இறைவனின் அத்தாட்சிகளில் சில வரும் அந்நாளில், இதற்கு முன்னால் நம்பிக்கை கொள்ளாமலும், அல்லது நம்பிக்கைக் கொண்டிருந்தும் யாதொரு நன்மையையும் சம்பாதிக்காமலுமிருந்து விட்டு, அந்நாளில் அவர்கள் கொள்ளும் நம்பிக்கை எவ்வித பலனையும் அவர்களுக்கு அளிக்காது - ஆகவே அவர்களை நோக்கி “(அந்த அத்தாட்சிகளை) நீங்களும் எதிர்பாருங்கள்; நாமும் எதிர்ப் பார்க்கின்றோம்” என்று (நபியே!) நீர் கூறும். (6:158)
யூதர்களுடனான மோதல்
யூதர்களுடன் முஸ்லீம்கள் போரிடாத வரை மறுமை நாள் வராது. ஜோர்டான் நதியின் வடபுறத்தில் அவர்கள் இருப்பார்கள். இப்போரில் முஸ்லீம்கள் வெல்வர். ஒவ்வொரு கல்லும் மரமும் " ஓ முஸ்லீமே. என் பின்னால் ஒரு யூதன் ஓளிந்து கொண்டிருக்கிறான். அவனை கொல்" என காட்டி கொடுக்கும். அப்போதும் அக்கல்லும் மரமும் முஸ்லீம் என நம்மை ஒரு உம்மத்தாக அழைக்குமே அன்றி நம் பிரிவு அல்லது அமைப்பு பெயர்களை கொண்டு அழைக்காது.
பலஸ்தீனை மீட்போம்,
அல் அக்ஸாவை காப்போம்,
அடக்குமுறைகளுக்கும் ஒடுக்கும் சிறைகளுக்கும்
எதிராய் போர் தொடுப்போம்.
இன்றைய தோல்விகள் தோல்விகள் அல்ல,
நாங்கள் கற்கின்ற பாடம்,
நபி ஈஸாவும் விரைவில் வருவார்,
அது வரை ஓய்ந்திட மாட்டோம்.
(அன்பு சகோதரர்களே ஒரு உரையினால் ஈர்க்கப்பட்டு உரை நிகழ்த்தி பின் அவ்வுரை கொண்டே இக்கட்டுரை எழுதப்பட்டதால் எழுத்து நடை சில இடங்களில் பேச்சு நடையில் இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment