இல்லாமையும் இயலாமையும் இங்கு ஒழிய வேண்டும்.
தேசமே நாம் வாழவேண்டும்.
கரங்கள் கோர்த்து
உறவுகளுக்கு உரம் சேர்க்க வேண்டும்.
மாசற்ற மனம் கொண்டு
வேண்டும்.
ஈர வரப்போரங்களில் நெற்றி
வேர்வை சிந்தி
மண் எல்லாம் பொன் விளைக்க
வேண்டும்!
சாதனைகள் பல புரிந்து
பலசரிதிரங்கள் படைக்க வேண்டும்.
கொஞ்சும் எழில் என்றும் மிஞ்சி
நிற்கவும் .
கொல்லும் உயிர்க் கொல்லிகளை
கொன்று விடவும் சூழல் காக்க
வேண்டும்.
தேசமே நாம் வாழவேண்டும்.
No comments:
Post a Comment